கருப்பு பட்டை அணிந்து சட்டமன்றம் வந்த அதிமுக உறுப்பினர்கள்!
TN Assembly 2025 ADMK Karur
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையிலே நேற்று சட்டசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரின் மறைவுக்காக சபாநாயகர் மு.அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார். பின்னர், அவர்கள் நினைவாக 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, கரூரில் நடைபெற்ற துயரமான கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேருக்காகவும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி நிறைவடைந்ததும், சபாநாயகர் கூட்டத்தை அன்றைக்குத் தள்ளிவைத்தார்.
இன்று சட்டசபையின் இரண்டாவது நாள் அமர்வு சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் தொடங்கியது. அமர்வு தொடங்குவதற்கு முன்பே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பட்டை அணிந்து சபைக்குள் நுழைந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் விபத்திலும், கிட்னி திருட்டு விவகாரத்திலும் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
அமர்வின் போது, சபாநாயகர் ஒழுங்கை பேணுமாறு எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் திட்டமிட்டபடி அவை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.
அரசு நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சியின் எதிர்ப்புகளுக்கும் நடுவே, தமிழக சட்டசபையின் இன்றைய அமர்வு அரசியல் சூடுபிடித்ததுடன் தொடங்கியது.
English Summary
TN Assembly 2025 ADMK Karur