அமெரிக்க தேசிய ரகசியங்கள் கைப்பற்றப்பட்டன!- இந்திய வம்சாவளி நிபுணர் ஆஷ்லே டெல்லிஸ் சிக்கலில்
US national secrets seized Indian origin expert Ashley Tellis in trouble
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவு கொள்கை நிபுணர் ஆஷ்லே டெல்லிஸ் (64) மீது தேசிய பாதுகாப்பு ரகசிய ஆவணங்கள் சட்டவிரோதமாக வைத்திருந்தது மற்றும் சீன அதிகாரிகளை சந்தித்தது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, வர்ஜீனியாவின் வியன்னா நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிக ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் அமெரிக்க விமானப்படை, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான பல முக்கியமான ஆவணங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்கா–இந்தியா உறவுகளில் மரியாதைக்குரிய நிபுணராகவும், தெற்காசிய வெளியுறவு கொள்கையில் செல்வாக்கு மிக்க குரலாகவும் கருதப்படுகிறார்.
அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆலோசகராக பணியாற்றியவர்.அதுமட்டுமின்றி,டெல்லிஸ் வெளியுறவு துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பென்டகனின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தில் ஒப்பந்த நிபுணராகவும் இருந்ததாக FBI பிரமாணப் பத்திரம் குறிப்பிடுகிறது.
தற்போது அவர், வாஷிங்டனில் உள்ள “கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ்” எனும் சிந்தனைக் குழுவின் மூத்த உறுப்பினராக உள்ளார். ஆனால், அவரது கைது அமெரிக்க அரசியல் மற்றும் வெளியுறவு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
US national secrets seized Indian origin expert Ashley Tellis in trouble