தீபாவளியில் டாஸ்மாக் விற்பனை ரூ.500 கோடி மைல்கல்லை கடக்கப் போகிறது...!
Tasmac sales are going to cross the Rs500 crore milestone by Diwali
வரும் 20-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை வெள்ளம் பெருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பண்டிகை சீசனில் மதுவிற்பனை சாதனை படைக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மேலாளர்களுக்கு “போதுமான மதுபான இருப்பை உறுதிசெய்யவும், குறிப்பாக பீர் வகைகளை அதிகப்படுத்தவும்” என்ற அவசர உத்தரவை அனுப்பியுள்ளது.

இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது,"தீபாவளி வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு, திங்கள்) மதுபான தேவை மிக அதிகரிக்கும். சுற்றுலா பயணிகள் கூட்டமும் கூடும். இதனால் முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் கூடுதல் பீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது 10-க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்பனையில் உள்ளன. அதில் வேகமாக விற்கப்படும் 7 வகைகள் அதிக அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.அதுமட்டுமின்றி,தினசரி சராசரியாக ₹140 கோடி முதல் ₹150 கோடி மதுபான விற்பனை நடைபெறுகிறது. ஆனால் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் அது 30-40% வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில்:
2023 தீபாவளி: 3 நாட்களில் ₹460 கோடி விற்பனை
2024 தீபாவளி: 2 நாட்களில் ₹438 கோடி விற்பனை
இந்த ஆண்டு, டாஸ்மாக் விற்பனை ₹500 கோடியை தாண்டும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்கள் மட்டும் மொத்த விற்பனையில் 40% பங்களிப்பு வழங்குகின்றன. மேலும், விடுமுறை நாட்களில் ஊட்டி, கோடைக்கானல், யேர்காடு போன்ற சுற்றுலா தளங்களில் மது விற்பனை வெடிப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் கணிக்கிறது.
இவ்வாறு டாஸ்மாக் தீபாவளி வருவாயை “பொங்கல் பண்டிகை அளவுக்கு உயர்த்த” தயாராகி வருகிறது.
English Summary
Tasmac sales are going to cross the Rs500 crore milestone by Diwali