சட்டசபையில் சுடச்சுட! - அதிமுக மீது 'வார்த்தை தாக்குதல்' நடத்திய ஸ்டாலின்...! - Seithipunal
Seithipunal


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற சட்டசபை கூட்டம் இன்று தீவிர விவாதத்தால் களைகட்டியது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கேள்வி எழுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விரிவான விளக்கமளித்தனர்.

இதன்போது, அமைச்சர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் எடுத்துரைத்தனர். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.அதிமுகவினரின் இந்த நடவடிக்கையால் சட்டசபை சில நிமிடங்கள் பரபரப்பாக மாறியது.

இதையடுத்து எழுந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக தாக்கி தெரிவித்ததாவது,“கூட்டணிக்காகவே இப்படி ஒரு நாடக அரசியல் நடக்கிறது.எந்தக் கூட்டணியை அமைத்தாலும், மக்களே அதற்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.அதிமுக - தவெக கூட்டணி உருவானாலும், மக்களின் தீர்ப்பு தெளிவாக இருக்கும்.

வெளிநடப்பு செய்யவேண்டும், கலவரம் கிளப்பவேண்டும் எனத் திட்டமிட்டு வந்துள்ளனர்.தங்களது கட்சியினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட, இப்படி ஒரு ‘போர்க்குரல்’ அதிமுகவிடமிருந்து வந்திருக்குமா என்பது சந்தேகமே!” என்றார். முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,"அதிமுக எந்த அளவுக்குக் கூட்டணி அமைத்தாலும்,மக்களிடம் அது ஒத்துழைப்பு பெறாது; பயனளிக்காது"என்று கடுமையாக விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shoot Assembly Stalin launched verbal attack AIADMK


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->