அதிர்ச்சி திருப்பம்! தன் இறப்பை நடித்து, சடங்கில் எழுந்து நின்ற முன்னாள் விமான வீரர்...! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் கயாவில் நடந்த ஒரு வினோதச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.சுமார் 74 வயதான முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால், தன் மரணத்தை நாடகமாய் நிகழ்த்தி, தனக்கே இறுதிச்சடங்கு நடத்தி அனைவரையும் வாயடைத்துப் போக வைத்துள்ளார்.

இதில் 14 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்த மோகன் லாலுக்கு, இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அண்மையில் அவர் திடீரென யோசித்தாராம்,“நான் உண்மையிலேயே இறந்துவிட்டால் யார் யார் வருவார்கள்? யாருக்கு என்னை பற்றிச் சற்று அன்பு இருக்கிறது?” என்று.

அதைத்தான் சோதித்து பார்க்க முடிவு செய்தார். அவர் ஊரில் தன் மரணம் குறித்து செய்தி பரப்பி, முற்றிலும் உண்மையானபடி தன் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளையும் செய்து வைத்தார்.

மேலும், கிராம மக்கள் துக்கத்தில் மூழ்கி வந்து கண்ணீர் விட்டு விடைபெற்றபோது, திடீரென மோகன் லால் உயிரோடு எழுந்து உட்கார்ந்தார். அந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

சிலர் பயந்தும், சிலர் சிரித்தும் போனார்கள். அதன் பின்னர் மோகன் லால் சிரித்தபடி தெரிவித்தார், “இப்போ தான் எனக்குத் தெரியும், யார் என்னை உண்மையிலேயே நேசிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking twist Former airman fakes his own death and stands up at funeral


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->