தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த அரசுப் பேருந்து...! - 30 பேர் காயம்
Shocking incident Tenkasi driver lost control and the government bus fell into river 30 people injured
தென்காசி அருகே சாலையோர ஆற்றுக்குள் அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக கவிழ்ந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்தனர்.தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் அரசுப்பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.


பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததும், உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறியடித்து கூச்சலிட்டனர். பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததால் பலர் காயமடைந்து சிக்கிக் கொண்டனர்.இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று, பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் மற்றும் மீட்புப் பணியினர், பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Shocking incident Tenkasi driver lost control and the government bus fell into river 30 people injured