திருமணமான சில நாட்களில் துயரம்...! கள்ளக்குறிச்சியில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை...! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருமணமான சில நாட்களிலேயே புதுப்பெண் ஒருவர் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜிதா (25). பி.எஸ்.சி., பி.எட். பட்டப்படிப்பை முடித்திருந்த இவர், வாசுதேவனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில், சுஜிதா திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், நேற்று முன்தினம் சுஜிதா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இதனால் பதற்றமடைந்த உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர்.அப்போது, வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் அமைந்திருந்த கிணற்றில் சுஜிதா குதித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், சுஜிதா உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சுஜிதா உயிரிழந்ததற்கான காரணம் என்ன? குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy few days after marriage newlywed woman committed suicide by jumping into well Kallakurichi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->