பிரிக்ஸ் அமைப்பின் 20 ஆண்டுகளை நினைவுகூரும் இரண்டு நினைவு அஞ்சல் தலைகள் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


பிரிக்ஸ் அமைப்பின் 20 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்திய தலைமையில் தலைநகர் டெல்லியில், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இன்று (12 செப்டம்பர் 2026) இரண்டு நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

''BRICS: Two Decades of Cooperation, 2006–2026'' என்ற வாசகத்தைக் கொண்ட இந்த நினைவு அஞ்சல் தலை, உரையாடல், ஒத்துழைப்பிற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக பிரிக்ஸ் அமைப்பின் பரிணாம வளர்ச்சியைக் கொண்டாடுகிறது.

இந்த இரண்டு அஞ்சல் தலைகளும், ''மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்காகக் கட்டமைத்தல்'' என்ற கருப்பொருளின் கீழ், இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு 2026-இன் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கின்றன.

இதில் முதல் அஞ்சல் தலையானது'' பரஸ்பர மரியாதை, புரிதல், ஒற்றுமை'' ஆகிய உணர்வுகளுடன் பிரிக்ஸ் ஒரு தளமாக உருவெடுப்பதைக் குறிக்கும் வகையிலும், இரண்டாவது அஞ்சல் தலையானது அதன் சின்னத்தையும், இந்தியாவின் தலைமைப் பொறுப்பின் பின்னணியில் உள்ள 'மனிதநேயமே முதன்மை', 'மக்களை மையப்படுத்திய தன்மை' என்ற பார்வைகளை வெளிப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Release of two commemorative stamps marking the 20th anniversary of the BRICS grouping


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->