''தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது''; அமைச்சர் அருண்ராஜ்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட சௌபாக்கியா நகரில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் அப்பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு, மாநகராட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, முறையாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை நடத்தினார். அதன்பின் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக மிகப் பெரிய வெற்றி பெறும் என்று செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Arunraj stated that the incidence of dengue in Tamil Nadu is gradually declining


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->