இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு..? நாளை அறிவிக்கவுள்ள இடதுசாரி காட்சிகள்..!
Left wing parties to announce tomorrow whom they will support in the by election
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனைக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர், உறுப்பினர்களுடன் பங்கேற்று இடைத்தேர்தல் குறித்து கலந்துரையாடினார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நாளையும் நடைபெறவுள்ளது. அதன் முடிவில் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் காணொலி வாயிலாக தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது கூறியதாவது;
இடைத்தேர்தல் தொடர்பாக திருச்சியில் நாளை அவசர மாநிலக் குழு கூட்டத்தை கூட்டுகிறோம். அதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 06-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய பிரதானக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
கூட்டணிக் கட்சிகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தரப்பில் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அதில் இணையவில்லை. ஆனால், வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு என தெரிவித்தது. அத்துடன், மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Left wing parties to announce tomorrow whom they will support in the by election