'மு.க.ஸ்டாலின் மனிதாபிமானம் உள்ளவர். ஆனால் முதலமைச்சர் ஜோசப் விஜய் மனிதாபிமானமே இல்லாதவர்'; ரகுபதி விமர்சனம்..!
Raghupathi criticizes Chief Minister Joseph Vijay calling him devoid of humanity
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தின் போது விஜய் மீது வழக்குப் பதிய செய்ய சொல்லி, சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் தான் தெரிவித்தேன்." என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆனால், கரூர் சம்பவம் குறித்து மனிதாபிமான அடிப்படையில் முதலமைச்சர் விஜய் மீது வழக்கு தொடர வேண்டாம் என முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார் என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியதாவது;
கரூர் சம்பவத்தின் போது விஜய் மீது வழக்குப் பதிய சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் தான் தெரிவித்தேன். அவர்தான் முதல் குற்றவாளி அவர் மீதுதான் வழக்குப்பதிய வேண்டும் என்று தெரிவித்தோம்.
ஆனால், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனிதாபிமான அடிப்படையில் அவர் ஒரு நடிகர். அதனால் அவர் மீது வழக்குப்பதிந்து சிறையில் எல்லாம் வைக்க வேண்டாம் என்று தெரிவித்து அவர் மீது வழக்கு பதிய வேண்டாம் என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமானம் உள்ளவர். ஆனால் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் மனிதாபிமானமே இல்லாதவர். தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விஜய் விமர்சித்தார்.
ஆனால் தற்போது முதலமைச்சரான பிறகு எங்கள் கூட்டணியில் உள்ளவர்களை சேர்த்துக்கொண்டு கல்லாப்பெட்டியை அவர்தான் வைத்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
English Summary
Raghupathi criticizes Chief Minister Joseph Vijay calling him devoid of humanity