பெரியாரின் 148 வது பிறந்த நாள்; 17-ஆம் பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்; சிற்றரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதையை செய்யவுள்ளதாக சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிற்றரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது;

''பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முதன்மை செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

எனவே முன்னாள் -இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chittarasu announces that MK Stalin will pay tribute to the Periyar statue on the occasion of his 148th birth anniversary


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->