லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸ் மைதானத்தில் ஓடி வந்து அஜித்குமாரை கட்டி தழுவிய முதல்வர் விஜய்..!
Chief Minister Vijay ran up and embraced Ajith Kumar at the Silverstone motor racing circuit in London
தமிழ்நாடு சட்டப்பேரவையில், உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
நடிகரும் கார் ரேசருமான அஜித் குமார் பங்கேற்கும் இந்த தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு 06 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நிகழ்ச்சிகள் முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தில் இடம்பெறுகின்றன.
முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில், உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு கார் ரேஸ் வீரரும் நடிகருமான அஜித் நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் நடைபெறும் அஜித் பங்கேற்கும் கார் ரேஸினை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் விஜய்யுடன் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அதிகாரிகள் மைதானத்தை தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள கார் ரேஸ் மைதானத்தின் மாதிரிக்காக பார்வையிடவுள்ளனர்.
English Summary
Chief Minister Vijay ran up and embraced Ajith Kumar at the Silverstone motor racing circuit in London