''ஓடுகாலி நாயே...... ஓடுகாலி நாய்களை இந்த நாட்டை விட்டு ஓட ஓட விரட்டுவோம்''; முதல்வர் விஜய்யை ஒருமையில் அவதூறாக பேசிய சேகர் பாபு..! - Seithipunal
Seithipunal


சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் குறித்தும் அவரது உடல்மொழி குறித்தும் எழுந்த விவாதங்களைத் தொடர்ந்து, பல அரசியல் தலைவர்களும் அதனை விமர்சித்து வருகின்றனர். 

அதன்படி, இன்று திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு திமுக சார்பில் சட்டப்பேரவையில், திமுக தலைவர்கள் மீது தமிழக முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கே.என். நேரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன், மேயர் அன்பழகன், மேயர் ப்ரியா, எம்.பி சல்மா, எம்எல்ஏ கதிரவன், முன்னாள் எம்எல்ஏ பழனியாண்டி உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ பி.கே. சேகர்பாபு முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போராட்டத்தில் சேகர் பாபு பேசியதாவது;

''ஓடுகாலி நாயே...... திறனற்ற தெம்பற்ற.. உனக்கு சட்டமன்ற பாதுகாப்பாக இருக்கின்றது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசவேண்டாம். அடிப்பட்ட புலியாக இன்று திராவிட முன்னேற்ற கழகம் இன்று களத்திலே நின்று கொண்டிருக்கிறது. நிச்சயம் ஒருநாள் வட்டியும் மொதலுமாக சேர்த்து ஓடுகாலி...... நாய்களுக்கு ஒப்படைப்போம்.. ஓடுகாலி நாய்களை..  இந்த நாட்டை விட்டு ஓட ஓட விரட்டுவோம். இன்றைக்கு எங்கள் உளவியலை நீ தொட்டு பார்த்திருக்கிறாய். நாங்கள்  வீண் சண்டைக்கு போவதில்லை.. எப்போதும் வீண் சண்டைக்கு போவதில்லை.. வந்த சண்டையை விடுவதில்லை.'' என்று மிக மோசமாக பேசியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 07 மற்றும் 08 தேதிகளில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் பேசிய போது மிசா குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் தாடையில் தாக்கப்பட்டது குறித்து வெளிப்படுத்திய உடல்மொழி மற்றும் செய்கைகள் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், இன்று நாகரிகமற்ற முறையில் முதல்வர் ஒருவரை ஒருமையில் அவதூறாக பேசிய சேகர்பாபுவின் பேச்சுக்கு அரசியல் கட்சிகளிடையே கண்டனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sekar Babu spoke disparagingly of Chief Minister Vijay using the singular form of address


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->