"மக்களை இனி கட்டுமரக் கதைகளால் ஏமாற்ற முடியாது": திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக ஐடி விங்! - Seithipunal
Seithipunal


மிசா (MISA) காலத்துச் சிறைவாசம் மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்தான தவெக மற்றும் திமுக இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், திமுகவினரின் போராட்டங்களை எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

போலி பிம்பம் உடைப்பு: பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்டு வந்த "சிறை சென்ற தியாகி" என்ற பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதை எண்ணிப் பதறிப்போய், திமுகவினர் போராட்டம் என்ற பெயரில் நாடகமாடி வருவதாகத் தவெக ஐடி விங் தாக்கியுள்ளது.

கடுமையான விமர்சனங்கள்: மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது.

திமுக தன் வரலாற்றில் எதை உலகறியக் கூடாது என்று மறைக்க முயன்றதோ, அது தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

டிட்டன்ஷன் காப்பி கேள்வி: பொதுமக்கள் மற்றும் எதிர்தரப்பினர் “Detention Copy எங்கே?” என்று ஆதாரத்தைக் கேட்டு நெருங்கும் போதெல்லாம், திமுக தரப்பு பழங்காலக் கட்டுமரக் கதைகளைக் கூறி திசைதிருப்ப முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிதர்சனம்: எவ்வளவுதான் கத்தினாலும் கதறினாலும், இனித் தங்களின் பழைய கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் காலத்தின் நிதர்சனம் என்று தவெக ஐடி விங் தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK IT Wing Slams DMK Amid MISA War of Words Alleges Fake Image Shattered


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->