சென்னை வடகிழக்கு பருவமழைக் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து என்டிஆர்எஃப் வீரர்கள் செயல் விளக்கம்..!
NDRF personnel demonstrate rescue operations for the Northeast Monsoon season in Chennai
வடகிழக்கு பருவமழைக் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து என்டிஆர்எஃப் வீரர்கள் இன்று, குடியிருப்போர் நலச்சங்கத்தினருக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அவசர காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் செயல் விளக்கங்கள் குறித்தும் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நடைபெற்று வரும் பணிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன வெள்ள மீட்பு மற்றும் நிவாரண மையங்கள், மைய சமையல் கூடங்கள், மருத்துவமனைகள், அவசரகால அழைப்புகள், மீட்புப் படகுகள் வைக்கப்பட்டுள்ள விவரங்கள், குடிநீர் விநியோகம், தன்னார்வலர்களாக நம்ம சென்னை செயலியில் பதிவு செய்தல், குடியிருப்பு நலச் சங்கங்கத்தினர் உள்ளிட்ட தன்னார்வலர்களின் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்துத் தகவல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அவசர காலங்களில் மக்களுக்கான முன்னெச்சரிக்கைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களை மீட்டு பாதுகாப்பது குறித்து செயல் விளக்கங்கள் செய்து காட்டினர்.
English Summary
NDRF personnel demonstrate rescue operations for the Northeast Monsoon season in Chennai