கேள்வி கேக்க சொன்னா கேவலமா கேக்குறீங்க.. - சீமான் பரபரப்பு பேட்டி!
Seeman Say About Vijayalakshmi 29082023
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கடந்த 2011-ஆம் ஆண்டு சீமான் மீது புகார் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
தொடர்ந்து நேற்று மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.
தனது புகார் குறித்து நடிகை விஜயலட்சுமி தெரிவிக்கையில், "சீமானை நம்பி இப்போது இங்கு நிற்கிறேன். அவரை கைது செய்யும் வரை எனது போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்து நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து கேள்விக்கு அளித்த பதிலில், "இதை அமைதியாக கடந்து போக வேண்டும் என்று நினைகிறேன்.
பல கோடிக் கணக்கான குடும்பங்கள் எனக்கு இருக்கிறது. எனக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது கேவலமாக உள்ளது” என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
Seeman Say About Vijayalakshmi 29082023