#BREAKING | கைது செய்யப்படுகிறாரா சீமான்! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடி செய்தாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

முன்னதாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், சீமான் மீதான புகாரில் நடிகை விஜய லட்சுமியிடம்  நேற்று 8 மணி நேரம்  நடந்த விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது, ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜய லட்சுமி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து  மேஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியை ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமானை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் களமிறங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜய லட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கோவை மாவட்டம் பல்லடம் அருகே அறிவித்திருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சீமானுக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman May be Arrest in Vijayalakshmi case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->