மகளை சுத்தியால் அடித்து, தானும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. ஊரே கேலி செய்த வார்த்தையை கூறியதால் ஆத்திரம்..!! - Seithipunal
Seithipunal


எடப்பாடி அருகே மகளை சுத்தியலால் அடித்துக் கொலை செய்து, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஆதி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோபால், இவரது மனைவி மணி. இவர்கள் இருவருக்கும் ராஜேஷ் கண்ணா என்ற மகனும், பிரியங்கா என்ற மகளும் இருந்துள்ளனர். 

கடந்த 6 மாதத்திற்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த கோபால், சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்து, பின்னர் ஊரில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜேஷ்கண்ணா பாட்டி வீட்டில் தங்கி பேக்கரி கடைகளுக்குச் பணிக்கு சென்றுவந்த நிலையில், மனைவி மணியும் அடிக்கடி கரும்பு வெட்டும் தொழிலுக்காக வெளியூர் சென்று உள்ளார். 

இதனால் வீட்டில் பெரும்பாலும் கோபாலும், அவரது 15 வயது மகள் பிரியங்காவும் இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த கோபாலை, கிராமத்தினர் கிறுக்கன் என்று கிண்டலடித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு பேசிக்கொண்டு இருக்கையில், மகள் பிரியங்கா தந்தையை கிறுக்கன் என்று கூறியுள்ளார். 

கோப்புப்படம் : கொலை 

ஊராரே கிண்டல் செய்யும் வார்த்தையை பெற்ற மகளும் கூறியதால், ஆத்திரமடைந்த கோபால் மகளை தரதரவென இழுத்துச் சென்று சுத்தியலால் தலையில் அடித்து கொடூர கொலை செய்துள்ளார். இதன் பின்னர் தனது தம்பிக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரிவிக்கவே, அவர்கள் இதை நம்பாத நிலையில், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு நேரடியாக தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அவர்கள் வீட்டிற்கு வந்து பார்க்கையில் பிரியங்கா இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளர். இதனைக்கண்ட உறவினர்கள் கோபாலை கண்டித்த நிலையில், தனது மகளை கொலை செய்து விட்டதை உணர்ந்து, யாருக்கும் தெரியாமல் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக எடப்பாடி காவல்துறைக்கு தகவல் தெரியவரவே, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Edappadi Daughter Murder and Father Suicide due to Mentally Affected Problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal