ராமேஸ்வரம் மாணவி கொலை: "கொலையாளி பட்டியலின இளைஞர்" என்ற தகவல் வதந்தி - தமிழ்நாடு சரிபார்ப்பகம் விளக்கம்!
Rameshwaram school girl murder case some fake news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், இன்று பள்ளிக்குச் செல்லும் வழியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளியில் படித்து வந்த அந்த மாணவிக்கு, முனிராஜ் என்ற இளைஞர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ், அவரை வழிமறித்து கத்தியால் குத்திக் கொன்றான். மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராமேஸ்வரம் காவல்துறையினர் முனிராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணையத்தில் பரவும் வதந்தி மறுப்பு
இந்தக் கொலையைச் செய்தவர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. இது குறித்து தமிழ்நாடு சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளப் பதிவில் மறுப்புத் தெரிவித்துள்ளது.
சரிபார்ப்பகம் வெளியிட்ட விளக்கத்தில், "இராமேஸ்வரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முனிராஜ், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை."
மேலும், "கைது செய்யப்பட்ட நபரும், கொல்லப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது. வெறுப்புப் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம்!" என்றும் அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Rameshwaram school girl murder case some fake news