கிளார்க் தற்கொலைக்கு திமுக கவுசிலர் தான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


வேலூரில் தற்கொலை செய்துகொண்ட கிராம ஊராட்சி செயலாளரின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் என்பவர், தனது மனைவிக்கு உருக்கமான ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் அந்த கடிதத்தில் 17வது வார்டு திமுக கவுன்சிலர் ஹரி தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று உயிரிழந்த ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஊராட்சிக்கு வரக்கூடிய நிதியை தன்னிடம் வழங்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் ராஜசேகரன் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், தனது தம்பிக்கு நியாய விலை கடையில் வேலை வாங்கித் தருவதாக கூறி தனிப்பட்ட முறையில் பல லட்சம் ரூபாய் திமுக கவுன்சிலர் ஹரி பெற்றுள்ளதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்தது, தனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் ராஜசேகரன் அந்த கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், ராஜசேகரனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கவுன்சிலர் கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையம் அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக திமுக கவுன்சிலர் ஹரி தரப்பில் இருந்து வந்த அதகவலின்படி, ராஜசேகரன் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாவும், சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramanayikuppam rajasekaran suicide issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->