280 கோடியை வாரி குவித்த லோகேஷின் கூலி!
rajinikanth coolie movie rs280 crores collection
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம் ரசிகர்களிடையே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்ததால், இப்படம் வணிக ரீதியாக சாதனை படைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
பெரும் அளவிலான புரமோஷன்கள், டிரெய்லர்கள், விளம்பரங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் பல குறைகள் இருப்பதாகவும், லாஜிக் பிரச்சனைகள் படத்தை பாதித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், கூலி வசூல் முதல் நாளிலேயே சுமார் ரூ.151 கோடி வசூலித்த படம், மூன்று நாட்களில் மொத்தம் ரூ.280 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
rajinikanth coolie movie rs280 crores collection