அதிர்ச்சி வீடியோ! பிக் பாஸ் & யுடியூபர் பிரபலத்தின் வீடு மீது துப்பாக்கிச்சூடு!
Haryana youtuber Bigg Boss shooting
அரியானா மாநிலத்தின் குருகிராமில் இன்று அதிகாலை பிரபல யூடியூபரும் பிக் பாஸ் ஓடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீடு தாக்குதலுக்கு உள்ளானது.
அதிகாலை சுமார் 5.30 மணியளவில், முகமூடி அணிந்த மூன்று பேர் எல்விஷ் வசிக்கும் செக்டார் 57 பகுதியில் உள்ள இல்லத்திற்கு வெளியே வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். திடீர் தாக்குதலில் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கூரைகள் சேதமடைந்தன.
அந்த நேரத்தில் எல்விஷ் யாதவ் வீட்டில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒருசில பணியாளர்கள் வீட்டில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.
வெடித்த குண்டுச்சத்தம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இந்த தாக்குதலை யார் மேற்கொண்டது, ஏன் குறிவைத்தார்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. எல்விஷ் யாதவ் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர் என்பதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Haryana youtuber Bigg Boss shooting