அரசின் தவறுதான் காரணம்... தெரு நாய்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை வினோதினி!
Dog Rabies rally Actress Vinothini
விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் சார்பாக உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து திருச்சி மற்றும் சென்னையில் பேரணி நடைபெற்றது.
சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை வினோதினி வைத்தியநாதன் தெரிவிக்கையில், "மனிதர்களில் ரேபிஸ் பாதிப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் 1 லட்சம் பேரில் ஒருவர் குற்றவாளி இருக்கிறார் என்பதற்காக அனைவரையும் தண்டிக்க முடியாதே;
அதுபோலவே 1 லட்சம் நாய்களில் ஒரே ஒரு நாய்க்கு ரேபிஸ் இருந்தாலும் அனைத்து நாய்களையும் சிறைபிடிப்பது தவறு. பாதிக்கப்பட்ட நாய்களை மட்டும் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.
அவர் மேலும், "இதற்காக அரசால் வழங்கப்படும் நிதி மாநகராட்சிகளால் சரியாக பயன்படுத்தப்படவில்லை. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை முறையை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
அதேசமயம், நாம் தெருக்களில் குப்பைகள் கொட்டுவதும் பிரச்சனையின் அடிப்படை காரணம். சுத்தமான சூழலை உருவாக்கினால் நாய்களின் பெருக்கமும் தாக்குதலும் தடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
English Summary
Dog Rabies rally Actress Vinothini