இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆசையா..? 'சிவகங்கை' கப்பல் சேவையில் மாணவர்களுக்கு கட்டண சலுகை.. ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட்..!
Fare concession for students travelling to Sri Lanka via Sivaganga ferry service and free tickets for teachers
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் சேவை கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், போதிய பயணிகள் வராத காரணத்தால் கப்பல் சேவை இடையில் நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து சுபம் நிறுவனம் சார்பில் மீண்டும் சிவகங்கை என்ற கப்பல் சேவை நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் தொடங்கியியது.
குறித்த சிவகங்கை கப்பல் சேவை தொடங்கி நேற்றுடன் (16-ஆம் தேதி) ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. நேற்று இரண்டாமாண்டு தொடக்க விழா நேற்று நடந்த நிலையில், இலங்கை செல்வதற்காக நாகை துறைமுகம் வந்த பயணிகளுக்கு கப்பல் நிர்வாகம் சார்பில் உரிமையாளர் சுந்தர்ராஜன் மாலை அணிவித்து அவர்களுக்கு பரிசு வழங்கி வரவேற்றுள்ளார்.
இதைதொடர்ந்து கப்பலுக்குள் மும்மத பிரார்த்தனை நடந்த நிலையில், பின்னர் மும்மதத்தை சேர்ந்தவர்கள் கொடியசைத்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிவகங்கை கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்துள்ளனர். இதன் போது, உரிமையாளர் சுந்தர்ராஜன் பேசியதாவது: சிவகங்கை கப்பல் சேவை மூலம் கடந்த ஓராண்டில் 20,098 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணம் இருநாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை மேம்பட செய்துள்ளதாகவும், கப்பலில் வரிவிலக்குடன் உயர்தர மதுபானங்கள் விற்பனை, துரித உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை, இலவச வைபை என பயணிகளை கவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், இரண்டாமாண்டு தொடக்க விழா சலுகையாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செல்ல சலுகைகளையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, மாணவர்கள் மூன்று பகல், இரண்டு இரவு இலங்கையில் தங்குவதற்கு கப்பல் டிக்கெட் கட்டணத்தோடு ரூ.9,999 மட்டும் என சிறப்பு சலுகை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன் டிக்கெட் கட்டணம் மட்டும் ரூ.8,000 ஆகும் என்று கப்பால் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், அறை வாடகை, உணவு, மற்ற செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இப்போது, சலுகை கட்டணம் ரூ.9,999 மட்டும் என்றும், அதேபோல் மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் இரண்டு ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று அதிரடி சலுகையை அறிவித்துள்ளார்.
English Summary
Fare concession for students travelling to Sri Lanka via Sivaganga ferry service and free tickets for teachers