மாமல்லபுரத்தில் கடலுக்கு அடியில் தமிழன் கட்டிய கோயில் கண்டுபிடிப்பு!
mamallapuram Sea water foot prints Hindu temple Archaeology
மாமல்லபுரம் கடற்கரையில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கோயில் ஒன்றின் தடயங்கள் கடலடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறையின் கடல் ஆராய்ச்சி பிரிவு மேற்கொண்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வரலாற்று குறிப்புகள் படி, 7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் கருங்கல்லால் ஏழு கோயில்களை கட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவற்றில் ஒன்றைத் தவிர மற்ற ஆறு கோயில்கள் காலப்போக்கில் கடலில் மூழ்கியதாகக் கருதப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு கடற்கரை கோயிலுக்கு அருகில் 1 கிலோமீட்டர் தூரம் வரை படகில் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, நவீன தானியங்கி கருவி 6 மீட்டர் ஆழத்திற்கு மூழ்கவிடப்பட்டது. அப்போது கடலடியில் கருங்கல் கட்டுமானங்கள் மற்றும் கோயில் தொடர்பான அடையாளங்கள் தென்பட்டன. இவை, பல்லவர் கால கோயில்கள் கடலில் மூழ்கியதாக உள்ள நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாமல்லபுரம் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு வரலாற்று மற்றும் பண்பாட்டு ஆய்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தொல்லியல் துறை தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு, மேலும் பல தகவல்களை வெளிக்கொணர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mamallapuram Sea water foot prints Hindu temple Archaeology