நமக்கே பசித்தால் கோபம் வருது, நாய்களுக்கு வரக்கூடாதா? ஏதாவது சாப்பாடு வைங்க... நடிகை அம்மு ஆவேசம்!
Actress ammu Dog Rabies rally
சென்னையில் நடைபெற்ற தெரு நாய்களுக்கு ஆதரவான பேரணியில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகை அம்மு ராமச்சந்திரன், “நாய்களை வாயில்லா ஜீவன் என்று சொல்வதற்குக் காரணம் அவை பேச முடியாததால் தான். பசி, வலி இருந்தால் அவை குழைக்கும், சில சமயம் கடிக்கும். மனிதர்களான நமக்கே பசித்தால் கோபம் வருகிறது. அப்படியிருக்க, அவைகளுக்கு வரக்கூடாதா?
சாலையில் பாய்ந்து ஓடும் வாகனங்கள் எத்தனை? யாராவது நின்று அந்த நாய்களுக்கு உதவி செய்கிறார்களா? நாய்கள் இல்லையென்றால் வாகனங்கள் இன்னும் அதிக வேகத்தில் பாய்ந்து விபத்துகள் அதிகரிக்கும்.
நாய்கள் குழந்தைகளை பாதுகாக்கின்றன. ஒரு சில சம்பவங்களில் கடித்திருந்தால் அதற்கு வருந்துகிறோம். ஆனால் அவை கொடுமை செய்யும் விலங்குகள் அல்ல” என்று கூறினார்.
விலங்கு நல ஆர்வலர்கள், தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை முறைகள் மற்றும் உணவு, சிகிச்சை வசதிகளை நகராட்சிகள் சரியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே நீண்டநாள் தீர்வு என்று வலியுறுத்துகின்றனர்.
English Summary
Actress ammu Dog Rabies rally