தலைநகரை நடுங்க வைத்த கொடூரம்! பெற்ற தாயை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த மகன்!
Delhi Son harass mother
டெல்லியில் துயரமான சம்பவம் ஒன்று வெளிச்சமிட்டுள்ளது. 39 வயது ஆண், தனது 65 வயது தாயையே இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் தகவலின்படி, ஆகஸ்ட் 11 இரவு 9.30 மணியளவில், மகன் தாயை தனி அறைக்குள் பூட்டி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இளம் வயதில் தாயார் தகாத உறவில் இருந்ததாக குற்றம் சாட்டி, அதற்கான “தண்டனை” என்ற பெயரில் இக்கொடுமை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கு மூன்று நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 14 அன்று மீண்டும் தாயை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் மனஉளைச்சலில் துன்புற்ற தாய், மறுநாள் தனது இளைய மகளிடம் நடந்தவற்றை பகிர்ந்து கொண்டார். பின்னர் இருவரும் ஹவுஸ் காசி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக விசாரணை தொடங்கி, மகனை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தாயாருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.