ஜடேஜா ''சூப்பர் ஸ்டார்'' ஆக வரணும்: ஆனால், அப்படி கொண்டாடாதீங்க, கவனமாக இருங்க.. ஆஸி.முன்னாள் வீரர் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


இந்தியா-இங்கிலாந்து இடையே 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா எப்போதும் பந்து வீச்சில் அதிகம் ஜொலிப்பவர், இம்முறை தனது பந்துவீச்சை விட பேட்டிங்கில் அசத்தி இருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் அவர் மொத்தம் 516 ரன்கள் குவித்த அதிக ரன் அடித்த 4-வது வீரர் சாதனையும் படைத்தார்.

ஜடேஜா எப்போதும் போட்டிகளில் சதம் அடித்துவிட்டால் வித்தியாசமாக பேட்டை வாளைப் போல சுழற்றி கொண்டாடுவார். அதாவது ஸ்வார்டு செலிபிரேஷன். இதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் அவருக்கு உண்டு. அவருடைய இந்த வாள் சுழற்சி கொண்டாட்டம் ஒவ்வொரு  முறையும் இணையத்தில் வைரலாகும். 

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா வாளைப் போல பேட்டை சுற்றி கொண்டாடும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். அப்படி செய்யும் போது அவர் தோள்பட்டையில் காயமடைந்து சில போட்டிகளைத் தவற விட வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: ஜடேஜாவைப் பொறுத்தவரை, அவர் காயம் அடைவதை தான் பார்க்கும் ஒரே வழி, வாள் கொண்டாட்டம் செய்யும்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அது பிரெட் லீ மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும் ஜடேஜா உடலை கவனித்துக் கொள்ள வேண்டும், அதிகமாக அதை கொண்டாடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரை ஜடேஜா தனது நாட்டிற்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் அவர் அந்த மாயாஜால 100 போட்டிகளை தாண்டிச் செல்வார் என்றுதான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை பொறுத்தவரை தங்கள் நாட்டிற்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய எவரும் ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார். அதே போல ஜடேஜா இன்னும் 02 வருடங்களில் மேற்கொண்டு 15 போட்டிகளில் விளையாடி 100 போட்டிகளைத் தாண்டி செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Aussie player warns Jadeja to do more sword celebrations


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->