படம் பிடித்தால் மட்டுமே பார்க்க வாருங்கள்... இல்லையென்றால் வேண்டாம்..!- அனுபமா - Seithipunal
Seithipunal


நடிகை 'அனுபமா பரமேஸ்வரன்' அடுத்ததாக 'பரதா' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.இப்படத்தில் தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா க்ரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தை ஆனந்த மீடியா நிறுவனம் தயாரிக்க கோபி சுந்தர் இசையை மேற்கொண்டுள்ளார்.இதற்கு முன்பு இந்த இயக்குனர் சினிமா பண்டி மற்றும் சுபம் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த 'பரதா' திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் கதைக்கரு என்னவென்றால், பரதா கட்டாயமாக அணியும் வழக்கத்தை வைத்திருக்கும் கிராமத்தில் இருந்து அனுபமா வருகிறார், அவர் ஒரு பயணத்தில் மற்ற பெண்களை மற்றும் உலகை புரிந்துக் கொள்ளும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

அனுபமா:

அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் அனுபமா தெரியவித்ததாவது," எங்களிடம் விமர்சகர்களுக்கு நல்ல விமர்சனம் எழுத சொல்லி கொடுக்க பணம் இல்லை. இப்படத்தின் மீது வெளிவரும் விமர்சனங்கள் அனைத்தும் மக்களின் இயற்கை வெளிபாடாக தான் இருக்கும். விமர்சங்கள் நன்றாக இருந்தால் படத்தை திரையரங்கில் காண வாருங்கள் இல்லையெனில் இப்படத்தை நீங்கள் பார்க்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Come and see film only if you like otherwise dont Anupama


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->