வாக்கு திருட்டு: மெகா பேரணியை தொடங்கிய இண்டி கூட்டணி!
bihar election Congress election campaign start
காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய மெகா பேரணி இன்று பிகாரின் சசாரத்தில் தொடங்கி உள்ளது.
வரவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சிகள், வாக்குத் திருட்டை தடுக்க மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளன.
இதையடுத்து, வாக்குரிமையை பாதுகாக்கும் நோக்கில் மாபெரும் ‘வாக்குரிமைப் பேரணி’ ஆரம்பிக்கப்பட்டது. சசாரத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, கன்னையா குமார், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், கம்யூனிஸ்ட் தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
பேரணி பகல் 2.30 மணிக்கு மேடையில் மூவண்ணக் கொடியசைத்து தொடங்கப்பட்டது. மொத்தம் 16 நாட்கள் நீடிக்கும் இந்தப் பேரணி சுமார் 1,300 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளது.
பாதையில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை கடந்து, செப்டம்பர் 1-ஆம் தேதி பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் பெரிய பொதுக்கூட்டத்துடன் நிறைவடையும்.
எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியல் முறைகேடுகளைத் தடுக்க மட்டுமின்றி, ஜனநாயக உரிமைகளை காக்கும் போராட்டமாகவும் இந்த பேரணியை முன்னெடுத்து வருகின்றன.
English Summary
bihar election Congress election campaign start