தீபாவளி தொடர் விடுமுறையொட்டி, தொடங்கிய ரயில் டிக்கெட் முன்பதிவுகள்: யாருக்கெல்லாம் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி..! - Seithipunal
Seithipunal


 தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு ஏராளமான பல ஊர்களில் இருந்தும், குறிப்பாக சென்னையில் இருந்து  படை எடுப்பார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கி மும்முரமாக டிக்கெட் முன் பதிவுகள் நடைபெற்று வருகிறது.

ரயில் நிலைய முன்பதிவு மையங்களிளிலும், இணையதளம் வாயிலாகவும் இன்று காலை 08 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளதாவது: இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctc.co.in அல்லது செல்போன் செயலியில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

அதன்படி வரும் அக்டோபர் 16-ஆம் தேதி (வியாழன்) அன்று செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மற்றும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் இன்று காலை 08 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 

அதேபோல் அக்டோபர் 17-ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்டோபர்18-ஆம் தேதிக்கு நாளை மறுநாள் அன்றும், அக்டோபர் 19-ஆம் தேதிக்கு, வரும் 20-ஆம் தேதியும், தீபாவளி நாளான 20-ஆம் தேதிக்கு, வரும் 21ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரயில்களில் அக்டோபர் 13 முதல் 26-ஆம் தேதி வரை சொந்த ஊர் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ந் தேதி வரை ஊர் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Train ticket bookings begin with 20 percent discount on fares for Diwali holiday


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->