வீடு தேடி வெள்ளம் தான் வருகிறது என்று மக்கள் குமுறுகிறார்கள் - ஆர்மி உதயகுமார் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற எதிர்க்கட்சித் துனைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், "தாயுமானவர் திட்டம் முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் திட்டமாக தெரியவில்லை. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டமாக தெரிகிறது - எதிர்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

தாயுமானவர் திட்டம் தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் :

இந்த நான்கரை ஆண்டு கால திமுக ஸ்டாலின் அரசில் புதிய புதிய திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்து, புதிய பெயர்களை, திட்டங்களுக்கு சூட்டுவதிலே உலக சாதனை படைத்து இருக்கின்றார்கள். 

ஆனால் திட்டத்தினுடைய பலன் மக்களுக்கு போய் சேருகிறதா, திட்டத்தினுடைய நிலைமை என்ன என்பதெல்லாம் ஆய்வு செய்யப்படுகிறதா? அந்த திட்டத்தினுடைய நோக்கம் நிறைவேறுகிறதா? என்பதெல்லாம் இன்றைக்கு ஆயிரம் ஆயிரம் லட்சோப லட்சம் கேள்விகளாக மக்கள் மத்தியிலே எழுந்திருக்கிறது. 

இன்றைக்கு பெயர் சூட்டுகிற விழாவிலே சமீபத்திலே தாயுமானவர் திட்டம் தாய்த்தமிழ் நாட்டு மக்களை, தாய் தந்தையரை ஏமாற்றுகிற திட்டமா? என்று மக்கள் குமுறுகிற ஒரு நிலையை நாம் பார்க்கிறோம். 

கடந்த மாதம் ஸ்டாலின் திமுக அரசு அவசர அவசரமாக எந்த கட்டமைப்பும் ஏற்படுத்தாமல் எழுபது வயது முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் என்ற திட்டத்தை துவங்கினார்கள். 

பொது விநியோகத் திட்டம். தன்னுடைய அந்த செயல்பாடு தற்போது ஆயிரம் கேள்விகளுக்கு உட்பட்டிருக்கிறது. முறையாக பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? 

வேண்டிய இடங்களுக்கெல்லாம் அங்கே பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் திறக்கப்படுகிறதா? அமைக்கப்பட்டு இருக்கிறதா? 

மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா? என்பதெல்லாம் இன்றைக்கு ஆயிரம் ஆயிரம் கேள்விகளாக இருக்கிறபோது புதிதாக இந்த திட்டத்தை தாயும் தந்தையுமான தாயுமானவர் என்ற திட்டத்தை அறிவித்தார்கள்.

ஆனால் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் படி முழுமையாக பலன் கிடைக்கிறதா என்றால், பல்வேறு காரணங்களைச் சொல்லி அலைக்கழிப்பு தான் நடைபெறுகிறது என்ற உண்மை நிலவரம், கள நிலவரம் தெரிய வந்திருக்கிறது. 

பிள்ளைகள் இருந்தால் அதற்கான சலுகைகள் கிடைக்காது. அவர்கள் ஆதரவற்றவர்களாக, முதியோர்களாக எழுபது வயதிற்கு மேல் இருந்தாலும் அதற்கான ரேஷன் கார்டு பெறவில்லை என்று சொன்னால், பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தால் இந்த சலுகைகளை இந்த சேவையை பெற முடியாது என்றெல்லாம் அலைக்கழிக்கப்படுகிற நிலையை நாம் பார்க்கிறோம்.

அப்படி என்றால் பிள்ளைகள் கைவிடப்பட்டவர்கள். பெற்ற பிள்ளைகளை இந்த திட்டத்தின் சேவையை பெறுவதற்காக கடைகளை சென்று வாங்க முடியாதவர்கள், வீட்டிலேயே அந்த சேவையை பெறுவதற்கு பிள்ளைகளை கூட அவர்கள் தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறதுஇந்த அரசுக்கு என்று வேதனைப்படுகின்றார்கள். 

ஆகவே பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களும், பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்றவர்களாக இருக்கக் கூடியவர்களுக்கு கடைகளுக்கு சென்று வாங்க முடியாதவர்களுக்கு இந்த அரசிடம் இந்த சேவை குறித்து என்ன பதில் இருக்கிறது என்றால் அது குறித்து உரிய விளக்கம் இல்லை.

உண்மையில் இது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் திட்டமாக தெரியவில்லை. 

வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த திட்டம் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வாக்குறுதியாக மட்டுமே. மக்களை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டமாக, மக்கள் வேதனைகளை விமர்சிப்பதை தாயுமானவராக தன்னை நினைத்துக்கொண்டு இருக்கின்ற மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே உங்கள் காதுக்கு கேட்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை. 

ஆகவே பெயர் சூட்டினால் மட்டும் பிள்ளைக்கு பெயர் சூட்டுவது மட்டும் முக்கியமல்ல. அந்த பிள்ளையை பெயர் பெறுகின்ற வகையிலே நாம் வளர்க்க வேண்டும். அது போல தான் ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்டுவதோடு இந்த அரசினுடைய கடமை முடிந்துவிடவில்லை. 

திட்டத்தை தொடங்கி வைப்பதோடு முடிந்துவிடவில்லை. அதற்கான அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்புகளையும், அதை செயல்படுத்துகிற வழிமுறைகளையும், அதை முறையாக செயல்படுகிறதா என்ற தொடர் ஆய்வுகள் மூலமாகத்தான். 

இது போன்ற புதிய பெயர்களை நீங்கள் சூட்டுகிற அந்த திட்டத்திற்கு ஒரு வடிவமைப்பு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்பதை முதலமைச்சர் பொது வாழ்க்கையிலே, அனுபவத்திலேயே நிச்சயமாக தெரிந்திருப்பார். 

ஆனால் அவருடைய இயலாமையின் காரணமாக அல்லது மக்கள் மீது அக்கறை இன்மையின் காரணமாகவா இந்த திட்டங்கள்?

வீடு தேடி மருத்துவம் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போது வடகிழக்கு பருவமழை இல்லை.

வீடு தேடி வெள்ளம் தான் வருகிறது என்று மக்கள் குமுறுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK RP Udhya kumar condemn to DMK mk Stalin govt


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?


செய்திகள்



Seithipunal
--> -->