தரமற்ற சாலைகளால் அரங்கேறும் சோகங்கள்.. கண்ணீர் வடிக்கும் இராசபாளையம் மக்கள்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையத்தில் இரயில்வே மேம்பால பணியானது நடைபெற்று வருகிறது. அங்குள்ள இராசபாளையம் நகரம் - ஆலங்குளம் ஊர்களை இணைக்கும் பிரதான சாலையாக இருந்து வரும் சாலைகளில் நடைபெறும் இரயில்வே மேம்பால பணியால் கடந்த சில வருடங்களாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இராசபாளையம் நகரத்திற்கு வர வேண்டும் என்றால், 3 கிமீ தூரம் சுற்றியே வர வேண்டி உள்ளது. இதுமட்டுமல்லாது இரயில்வே பாதையை கடந்து ஆலங்குளம் செல்லும் வழியில் தான் பல்வேறு காட்டன் மில் அமைந்துள்ளது. பி.ஏ.சி இராமசாமி ராஜா நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

இதனால், இப்பகுதியை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், பால கட்டுமான பணிகள், தாமிரபரணி குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் என ஊரே மேடுபள்ளமாக மாறியுள்ளது. தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டதால், மக்களின் நிலைமை பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. 

அந்த வகையில், தற்போது பேருந்து ஒன்று சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கியுள்ளது. இராசபாளையம் நகரில் இருந்து சத்திரப்பட்டி, ஆலங்குளம் செல்லும் பேருந்துகள் மலையடிப்பட்டி இரயில்வே கேட் வழியாக சுற்றி பேருந்துகள் மற்றும் மக்கள் சென்று வருகின்றனர். ஆலங்குளம் அரசு சிமிண்ட் ஆலைக்கு செல்லும் பிரதான பாதையாக இது இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று சத்திரப்பட்டி புறப்பட்ட தனியார் பேருந்து, சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்குள் சிக்கியுள்ளது. இதனால் பேருந்தின் ஒருபுறம் கீழே இறங்கியுள்ளது. இதனையடுத்து பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, மாற்று பேருந்துகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். 

பாலப்பணிகள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், நகரின் பிற முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளை அரசு சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றும் இராசபாளையம் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajapalayam KAYESR bus Struggled Contamination Road due to Bridge Construction going on


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal