தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்! தமிழக அரசுக்கு பறந்த பகீர் எச்சரிக்கை!
Puthiya Thamizhakam Announce Protest oct 2 for TASMAC
வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால், மாநிலம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என்று, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி தெரிவித்தாவது, "தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்.
நாட்டில் உள்ள எந்த மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் தான் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் குடிப்பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதமாகிவிட்டது. ஆனால், டாஸ்மாக் கடைகளையோ, மது குடிப்பவர்களையோ குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக தமிழகம் முழுவதும் மது பழக்கம் அதிகரிக்கவே இந்த திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அண்மையில் திண்டுக்கல் அருகே பிறந்த நாளையொட்டி தனியார் பள்ளி மாணவிகள் 7 பேர், வகுப்பறையிலேயே மது விருந்து அளித்துள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் மதுப்பழக்கம் எந்த அளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி.
எனவே, அக்டோபர் 2ம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தவில்லை என்றல், தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.
English Summary
Puthiya Thamizhakam Announce Protest oct 2 for TASMAC