தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை - கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
private college student sucide in trichy
தனியார் கல்லூரி மாணவர் தற்கொலை - கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே காட்டூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் மார்ட்டின் மகன் நோவா வில்லியம்ஸ். இவர் குண்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அப்போது, வில்லியம்ஸ்க்கு அரியமங்களம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர், நோவா வில்லியம்ஸின் அக்கா வீட்டிற்கு சென்று தங்கள் பெண்ணை இரண்டு ஆண்டு கழித்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், நோவா வில்லியம்ஸ் இதனை நம்பாமல், மன உளைச்சலுடன் இருந்து வந்தார். இந்த நிலையில், நோவா வில்லியம்ஸ் நேற்று காலை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து நோவா வில்லியம்ஸின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் அவரது அறையை சோதனை செய்ததில் கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில் ‘நீ என்னை பிரிந்து விடுவாய் என்று உன் மீது சந்தேகப்பட்டேன். ஆனால் அது உண்மை இல்லை.

எங்கே நம்மை பிரித்து விடுவார்களோ? என்ற பயத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். நீ இந்த கடிதத்தை படிக்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்.
எனது தம்பியும் இது போன்று காதலித்தால் அவனையாவது, சேர்த்து வையுங்கள்’ என்று உருக்கமாக எழுதியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
private college student sucide in trichy