பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் தீர்ப்பு! சாகும்வரை ஆயுள் தணடனை!
Pollachi abuse case cbi
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி நந்தினி தேவி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தண்டனை விவரம் இன்று பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தணடனை வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.