எங்களை சீண்டினால் தனிமை; அமெரிக்காவுக்கு சீன அதிபர் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வர்த்தகப்போர், வரிப்போரில் யாரும் வெற்றியாளர்கள் கிடையாது. சீண்டிப்பார்த்தல், ஆதிக்கம் செலுத்த முயற்சித்தல் தனிமைப்படுத்தலுக்கே வழிவகுக்கும்' என அமெரிக்காவுக்கு சீன அதிபர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதித்துவருகிறார். அந்தவகையில்  சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியும், சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியும் உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது.

இந்த  வர்த்தகப்போரை முடிவுக்கொண்டுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து  சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. 

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்ற்றும் போது, அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்தார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், வர்த்தகப்போர், வரிப்போரில் யாரும் வெற்றியாளர்கள் கிடையாது. சீண்டிப்பார்த்தல், ஆதிக்கம் செலுத்த முயற்சித்தல் தனிமைப்படுத்தலுக்கே வழிவகுக்கும்' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If you provoke us isolation Chinese President warns America


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->