காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா..கருட சேவையை காண குவிந்த பக்தர்கள்!
In Kanchipuram the Varadaraja Perumal Temple is celebrating the Vaikasi Brahmotsav festival Devotees have gathered to witness the Garuda service
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் வரதராஜ பெருமாள்சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வீதிஉலா நடைபெற்றுவருகிறது.அந்தவகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, கருட சேவை உற்சவம் நடைபெற்றது.
கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, நீல நிற பட்டு உடுத்தி, மல்லிகைப்பூ, மகிழம்பூ உள்ளிட்ட மலர் மாலைகள், வைர வைடூரிய திருவாபரணங்கள் அணிவித்து அதிகாலை தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
அப்போது வேத வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயணம் மற்றும் பஜனை கோஷ்டியினர் பாடிவர, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் ஆழ்வார் பிரகாரத்தில் சுற்றி வந்து ஆழ்வார்கள் சன்னதியில் சேவை சாதித்து விட்டு ஐந்து மணியளவில் கோபுர வாசலில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார் .
அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாள், நண்பகல் ஒரு மணி அளவில் கோவிலுக்கு திரும்பினார். தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் காஞ்சிபுரம் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
English Summary
In Kanchipuram the Varadaraja Perumal Temple is celebrating the Vaikasi Brahmotsav festival Devotees have gathered to witness the Garuda service