முப்பெரும் விழாவுக்கு பின் தி.மு.க-வுக்கு ‘நோ ரீ-என்ட்ரி’...! - தமிழிசை கடும் எச்சரிக்கை
No re entry DMK after Muperum festival Tamilisai issues warning
கோவை விமான நிலையத்தில், முன்னாள் கவர்னரும் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவருமான 'தமிழிசை சவுந்தரராஜன்' பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"நாட்டின் துணை ஜனாதிபதியாக ஒருதமிழர் தேர்வானது, தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
ஆனால் தமிழர்களுக்காக எந்த ஆதரவையும் செய்யாத தி.மு.க-வை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. முப்பெரும் விழா நடத்தினாலும், நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் தி.மு.க-வுக்கு ‘வெளியேற்றமே ஒரே வழி’.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்ததே தி.மு.க.வின் நரம்பை பிசைந்து விட்டது. அதனால்தான் அவர்கள் நடத்திய முப்பெரும் விழாவில் ஒரு பதட்டம் தெளிவாக தெரிந்தது.பா.ஜ.க. மீது தேவையில்லாத அடக்குமுறை குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.
ஆனால் முதலில் தங்களுடைய அமைச்சரவையில் உள்ள ஊழலைச் சுத்தம் செய்யட்டும். செந்தில்பாலாஜி எத்தனை நாள் வெளியே இருக்கப் போகிறார் என்பதை நாம் காத்திருப்போம்.
2026-ஆம் ஆண்டின் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று வலுவான ஆட்சி அமைப்பது உறுதி. தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் மக்கள் நலனுக்கான ஒரு சொல்கூட இடம் பெற்றதா? ஒன்றுமே இல்லை.இதுவரை தி.மு.க. குடும்பத்தினருக்கே பதவி வழங்கப்பட்டு வந்தது.
இப்போது விருதுகளையும் தங்களுக்கே வாங்கிக் கொள்கிறார்கள். வாக்கு திருட்டு என காங்கிரஸ் கட்சியே குற்றஞ்சாட்டுவது, நகைச்சுவையை விட மோசமான பரிதாபம்" என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
English Summary
No re entry DMK after Muperum festival Tamilisai issues warning