காதலின் பெயரில் சதி...? -அமெரிக்க பெண் ரூபிந்தர் இந்தியாவில் மாயமான மர்மம்...!
Conspiracy name love American woman Rupinder mysterious figure India
அமெரிக்கா வாஷிங்டன்னை சேர்ந்த 71 வயது ரூபிந்தர் கவுர் பாந்தர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். மேலும், தனிமையில் வாழ்ந்து வந்த அவருக்கு ஆன்லைன் திருமண செயலி மூலம், இங்கிலாந்தில் வசிக்கும் 75 வயது சரஞ்சித் சிங் கிரேவால் என்ற இந்திய வம்சாவளியருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதற்கு முன்பு, கிரேவாலும் மனைவியிடம் இருந்து பிரிந்திருந்ததால், இருவருக்கும் இடையே நட்பாகத் தொடங்கிய உறவு விரைவில் காதலாக மாறியது. அதுமட்டுமின்றி,ரூபிந்தரை நேரில் சந்திக்க கிரேவால் அமெரிக்கா சென்றார். அப்போது இருவரும் நெருக்கமாக பழகி, திருமணம் செய்யலாம் என முடிவு செய்தனர்.

திருமணம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் தனது சொந்த கிராமத்தில் நடந்தால் நன்று என கிரேவால் தெரிவித்ததால், கடந்த ஜூலையில் ரூபிந்தர் இந்தியா வந்தார்.ஆனால், இந்தியா வந்த சில நாட்களிலேயே ரூபிந்தர் மர்மமாக மாயமானார். அவரிடமிருந்து எந்த தொடர்பும் வராததால் கவலையடைந்த அவரது சகோதரி கமல் கைரா, புதுடில்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் புகாரளித்தார்.
அந்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள், கிரேவாலின் மொபைலிலிருந்து தொடர்ந்து அழைக்கப்பட்டிருந்த எண்களை அடிப்படையாக கொண்டு சுக்ஜீத் சிங் சோன் என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
கிரேவாலின் தூண்டுதலின் பேரில் ரூபிந்தரை கொன்று உடலை எரித்துவிட்டதாக சுக்ஜீத் சோன் ஒப்புக்கொண்டார். மேலும், ரூபிந்தரிடமிருந்து ஏற்கனவே பணம் பறித்த கிரேவால், மேலும் ரூ.50 லட்சம் பெற திட்டமிட்டதாகவும், அதற்காகவே ரூபிந்தரை இந்தியாவுக்கு அழைத்ததாகவும் தெரியவந்தது.மேலும், ரூபிந்தரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதேசமயம் தலைமறைவாக உள்ள சரஞ்சித் சிங் கிரேவாலை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
Conspiracy name love American woman Rupinder mysterious figure India