தினமும் புது புது நாடகம்...! தேர்தல் வாக்குறுதிகளில் 10 % கூட நிறைவேற்றவில்லை...!- சாடிய அண்ணாமலை
Every day new drama Not even 10 PERCENTAGE election promises fulfilled Annamalai criticized
பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பதிவில், தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் அதில் குறிப்பிட்டதாவது,"அரசு அமைந்த தினத்திலிருந்து வெற்று விளம்பரங்களால் மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க., சட்டசபையில் அறிவித்த 256 திட்டங்களை நிறைவேற்ற இயலாது என்பதால் கைவிடுவதாக அறிவித்திருப்பது, அவர்களின் தோல்விக்கான வெளிப்படையான சாட்சி.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 % கூட முழுமையாக நிறைவேற்றாத நிலையில், தினமும் புதிய நாடகமே அரங்கேறி வருகிறது. ‘சொன்னதை செய்வோம், சொல்லாததை கூட செய்வோம்’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த நிலையில், இப்போது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சியாக கைவிடப்பட்ட 256 அறிவிப்புகள் இருக்கின்றன.
மேலும், 4 1 /2 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் எதுவும் தரப்படவில்லை. சொல்லாமல் செய்த ஒரே விஷயம், ஊர் ஊராக தந்தையின் சிலைகள் நிறுத்துவதே ! " என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
English Summary
Every day new drama Not even 10 PERCENTAGE election promises fulfilled Annamalai criticized