முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததே 'தலாக்' சொன்னதுக்கு காரணமா...?
Was reason for talaq being pronounced because first wife had no children
பெங்களூரு சந்திரா லே-அவுட் அருகே வசித்து வரும் ஒரு பெண், கணவன் சாபஜ் அலியால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக புகாரளித்துள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சாபஜ் அலி, இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இதில் நகரத்தில் 5 கடைகள் இருந்தபோதிலும், குழந்தை இல்லாதது குறித்து அடிக்கடி மனைவியை குற்றம் சாட்டி தகராறு செய்து வந்துள்ளார்.
அதற்கு மேல், தனது மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது முதல் மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, 3 முறை “தலாக்” என்று தெரிவித்து விவாகரத்து செய்ததாக தெரிகிறது.
ஆனால் அந்த பெண் இதை ஏற்காமல், மதத் தலைவர்களிடம் புகார் செய்தார். பேச்சுவார்த்தையின் போது கூட, தனது மனைவியின் உறவினர்களை சாபஜ் அலி தாக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி, செல்போனில் தலாக் என்று தெரிவித்து பிரிந்த சாபஜ் அலி மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Was reason for talaq being pronounced because first wife had no children