முகமூடி விமர்சனம் பயனற்றது...! -TTV தினகரனைக் குறிவைத்த எடப்பாடி பழனிசாமி...!
Masked criticism useless Edappadi Palaniswami targets TTV Dhinakaran
சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' பல முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.அதில்,"அமித்ஷாவின் பாராட்டு- எனது எழுச்சி பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார். மேலும், அ.தி.மு.க. உள்கட்சிச் செயல்பாடுகளில் பா.ஜ.க. எந்த வகையிலும் தலையிடாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

டி.டி.வி. தினகரன் மீது குற்றச்சாட்டு-ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தினகரன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சென்னைக்கு வர கூடாதவர். அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க 18 பேரை அழைத்துச் சென்றதும் தினகரனே. முகமூடி அணிந்தது என்கிற விமர்சனத்துக்கு எந்தவித அர்த்தமும் இல்லை.
ஓ.பி.எஸ். குறித்த பதிவு -பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெளியேற்றப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். அதில் எந்த குழப்பமும் இல்லை.
கூட்டணி குறித்த கருத்து-அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது இயல்பான விஷயம். டி.டி.வி. தினகரன் கூட்டணியில் சேர்வது குறித்து பேசப்படுவது உட்கட்சி விவகாரமே.
மற்ற விளக்கங்கள் -அமித்ஷாவை சந்திக்க யாருடன் சென்றேன் என்று கேட்க தேவையில்லை. கார் இல்லாததால் கிடைத்த காரில் ஏறிச் சென்றேன். கட்சியில் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையே. செங்கோட்டையன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை வெளியில் சொல்ல இயலாது" என்று தெரிவித்தார்.
English Summary
Masked criticism useless Edappadi Palaniswami targets TTV Dhinakaran