உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியில் தமிழ்ச் வம்சாவளி சேனுரான் முத்துசாமிக்கு இடம்! நாகை டூ தென்னாப்பிரிக்கா!
ICC World Test Championship Final 2025 AUS South Africa Senuran Muthusamy
2025 உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி பலப்பரீட்சை செய்ய உள்ளன. இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ம் தேதி தொடங்கும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் இன்று தங்களது வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளன.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-
உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், மேத்யூ குஹ்னெமன், பிரெண்டன் டாகெட் (டிராவலிங் ரிசர்வ்)
இதேபோல் டெம்பா பவுமா தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பட்டர்சன்.
இதில், தமிழ்ச் வம்சாவளியை சேர்ந்த ஓர் வீரரான சேனுரான் முத்துசாமிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், தென்னாப்பிரிக்காவிற்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானவர்.
2019-ல் இந்தியா அணிக்கு எதிராக தனது டெஸ்ட் பயணத்தைத் தொடங்கிய சேனுரான், இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
முன்னணி அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கின்ற நிலையில், சேனுரான் முத்துசாமியின் தேர்வு தமிழர்களிடையே பெருமையாகவும், ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
English Summary
ICC World Test Championship Final 2025 AUS South Africa Senuran Muthusamy