வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வு : முக்கியத்துவம் கருதி பாமக பங்கேற்கும் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வருகின்ற மே 28ஆம் தேதி (நாளை மறுநாள்) நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். 

நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் போது, இந்திய சுதந்திரத்தின் அடையாளமாக உள்ள, சோழ சாம்ராஜ்யத்தின் அதிகார பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "தில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய  நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. 

வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK announce for New Parliament Building open


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal