காதல் திருமணம் செய்த மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு.!!
peoples attack woman for son married other cast girl in kallakurichi
காதல் திருமணம் செய்த மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு.!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே S. கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் சூர்யா. இவர் ஐடிஐ முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே சூர்யாவும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதனால், அந்தப் பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல் பெண்ணின் உறவினர்கள் வீட்டில் தனியாக இருந்த சூர்யாவின் தாயிடம் மகன் எங்கே எனக் கேட்டு, அவரைத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
அந்த பெண்ணின் அம்மா சூர்யாவின் அம்மாவை தகாத வார்த்தைகளால் பேசியும், அவர் சார்ந்த சமுதாயப் பெயரைக் குறிப்பிட்டு திட்டியும் சூர்யாவின் வீட்டிலிருந்து தரதரதவென அடித்து இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த சூர்யாவின் தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சூர்யாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
peoples attack woman for son married other cast girl in kallakurichi