சோகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்! அதிமுக முன்னாள் ஏம்எல்ஏ மறைவு! - Seithipunal
Seithipunal


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காத்தமுத்து உடல்நலக்குறைவால் காலமானார். அதேபோல அதிமுக கழக அமைப்பாளர்  நத்தம் விசுவநாதன் மூத்த சகோதரர் மேகநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். இருவரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்கள்.

 

அவர்கள் தெரிவித்துள்ள இரங்கல் அறிக்கையில் திருச்சி புறநகர் மாவட்ட முன்னாள் தொட்டியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு கே பி காத்தமுத்து அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். அன்பு சகோதரர் காத்தமுத்து அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்கள். 

அதேபோல கழக அமைப்புச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மூத்த சகோதரர் மறைவிற்கு சகோதரரை இழந்து வாடும் அன்பு சகோதரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்கள். மறைந்தவர்களுக்கு அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS EPS Mourning to admk EX MLA Kathamuththu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->