பல்லடத்தில் அடுத்த சோகம்! கிரஷர் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலி!
One person died in crusher cylinder explosion in Palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கிரஷர் இயங்கி வருகிறது. இந்த கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வாகனத்திலிருந்து இறக்கியுள்ளனர். அவ்வாறு இறக்கும்போது திடீரென சிலிண்டர் வெடித்ததில் சதீஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். மேலும் இந்த சிலிண்டர் வெடிவிபத்தில் காயம் அடைந்த இருவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பல்லடத்தில் மதுபோதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது சிலிண்டர் வெடி விபத்து அரங்கேறியுள்ளது பல்லடம் வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
One person died in crusher cylinder explosion in Palladam