தமிழநாடு உள்ளிட்ட 22 இடங்களில் NIA அதிரடி சோதனை! பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் ஆதரவு?!
NIA Search in TN And state
தேசிய புலனாய்வு அமைப்பு இன்று நாடு முழுவதும் பெருமளவில் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் உட்பட மொத்தம் ஐந்து மாநிலங்களில் 22 இடங்களில் இந்த நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் ஆதரவு வழங்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா, குல்காம், ஆனந்த்நாக், புல்வாமா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக தேடுதல் நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் ஒன்பது இடங்களில், பிகாரில் எட்டு இடங்களில், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
English Summary
NIA Search in TN And state